முதியவர் விஷம் குடித்து சாவு

முக்காணியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் விஷம் குடித்து சாவு
Published on

ஆறுமுகநேரி:

முக்காணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 75). இவருக்கு 2 மனைவிகள். சங்கரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த சங்கரன், நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சங்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com