ஊரணியில் மூழ்கி முதியவர் சாவு

ஊரணியில் மூழ்கி முதியவர் இறந்தார்.
ஊரணியில் மூழ்கி முதியவர் சாவு
Published on

பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் நேரு (வயது 62). இவர், பொன்னமராவதி பஸ் நிலைய பகுதியில் முடி திருத்தம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் சந்தப்பேட்டையின் பின்புறம் உள்ள மலையா ஊரணிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரணியில் நேரு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசாதனைக்காக வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com