கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

சிவகிரியில் கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
Published on

சிவகிரி:

சிவகிரி குமாரபுரம் 18-வது வார்டு 1-வது சந்து தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவருடைய மனைவி ராமாத்தாள். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். குடும்பத்தினர் ராமசாமியை சரியான முறையில் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் சத்திரம், சாவடி, கோவில்கள் போன்ற இடங்களில் தங்கி உணவு சாப்பிட்டும், அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 1-ந் தேதி வெளியே செல்வதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை அக்கம்பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சிவகிரிக்கு மேற்கே கோனார்குளம் கண்மாய் அருகில் உள்ள தனியார் கிணற்றில் அவர் அழுகிய நிலையில் பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், ராமசாமி தண்ணீர் குடிப்பதற்காக கிணற்றில் இறங்கிய போது கால் தடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்து இறந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com