மயங்கி விழுந்த முதியவர் சாவு

மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
மயங்கி விழுந்த முதியவர் சாவு
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் புது காலனி தெருவை சேர்ந்தவர் சிட்டுலிங்கம்(வயது 67). சம்பவத்தன்று இவர் கடைவீதிக்கு நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதில் தலையில் காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிட்டுலிங்கம், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் சிட்டுலிங்கத்தின் மகன் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com