கத்தியை காட்டி மிரட்டிய முதியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
கத்தியை காட்டி மிரட்டிய முதியவர் கைது
Published on

பாளையங்கேட்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் வி.எம்.சத்திரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தா. அப்போது அங்கு வந்த ஒருவர் வெங்கடேசிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுதாகர் (வயது 63) என்பதும், மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து சுதாகரை போலீசார் கது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com