புதுவையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

புதுவையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.
புதுவையில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி
Published on

புதுச்சேரி, டிச.2-

புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 41 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 60 பேர், வீடுகளில் 229 பேர் என 289 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று 35 பேர் குணமடைந்தனர். அதேநேரத்தில் மாகியில் 86 வயது மூதாட்டி பலியானார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,873 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் தெற்று பரவல் 1.74 சதவீதமாகவும், குணமடைவது 98.32 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 350 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 5 ஆயிரத்து 116 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 12 லட்சத்து 34 ஆயிரத்து 704 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com