துக்க வீட்டிற்கு வந்த மூதாட்டி திடீர் சாவு

துக்க வீட்டிற்கு வந்த மூதாட்டி திடீர் உயிரிழந்தார்.
துக்க வீட்டிற்கு வந்த மூதாட்டி திடீர் சாவு
Published on

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 85). தச்சு தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார். இதையடுத்து துக்க வீட்டிற்கு அவரது உறவினர்கள் வந்திருந்தனர். இதேபோல் லால்குடியை அடுத்துள்ள பெருவளநல்லூர் கீழஉடையார் தெருவை சேர்ந்த சீதாவும்(வயது 70) அங்கு வந்திருந்தார். அங்கு அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பெருவளநல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. துக்க வீட்டிற்கு வந்த மூதாட்டி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com