மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த மூதாட்டி

மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த மூதாட்டி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த மூதாட்டி
Published on

பாடாலூர் 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புது அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மூக்காயி(வயது 70). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள அம்புஜம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com