காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். கண.குறிஞ்சி, நிலவன், பொன்னையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

நீர் உரிமை சட்டப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும். மாநிலங்களில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களுக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசும், கர்நாடகா அரசும் செயல்படக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் பேரமைப்பின் மாநகர தலைவர் அந்தோணி யூஜின், பி.பி.அக்ரஹாரம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ராஜா, சூளை அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் பொன்.பூபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், துணைத்தலைவர் சுந்தர்ராஜன், துணைச்செயலாளர் தங்கதுரை, தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் பாலகிருஷ்ணன், பீட்டா மாநில தலைவர் கிருபானந்தா, அனைத்து வணிகர்கள் சங்க தலைவர்கள் கமல்ஹாசன் (அசோகபுரம்), கலையரசன் (மாணிக்கம்பாளையம்), ஆனந்தன் (மூலப்பாளையம்), பிரேம்குமார் (கருங்கல்பாளையம்), விஜயகுமார் (மூலப்பட்டறை), நேதாஜி தினசரி மார்க்கெட் கனி வணிகர்கள் சங்க செயலாளர் சாதிக்பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com