

சென்னை,
தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இது குறுத்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கழகத் தலைவர் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம்.
''எங்கு அதிகமாக ஏழ்மை இருக்கிறதோ, எங்கு எளிய மக்கள் அதிகம் இருக்கிறார்களோ, அங்கு அவர்களுக்காகப் பணி செய்யவும். அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதுமே என் கடமை'' என்று கழகத் தலைவர்கள் தொடர்ந்து சொல்லிவருவதன் ஒருபகுதியாக பெரம்பூர் தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுகிறார்.
பெரம்பூர் தொகுதியில் மக்களைச் சந்திக்கும்போது, ஒவ்வொருவரும் வெற்றித் தலைவரை தங்கள் குடும்பத்தில் உள்ள அண்ணனாக, தம்பியாக, அவர்கள் வீட்டுப் பிள்ளையாக போற்றி வாழ்த்தி வருகிறார்கள். பெரம்பூர் மக்கள் கொடுத்துவரும் பேராதரவு நமது வெற்றியை உறுதியாகக் கூறுகிறது.
விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்!
மக்கள் நலனை வென்றெடுப்போம்!!
நம்மால் முடியும்!!!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.