

வேளாங்கண்ணி அருகே பைனான்சியர் கொலை வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பைனான்சியர் படுகொலை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் மனோகர் (வயது 40). பைனான்சியர். இவர் கடந்த 17.8.2022 தேதி தனது அலுவலகத்தில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மனோகரனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தெற்குப்பொய்கைநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு என்கிற மகேஸ்வரன் (42) உள்பட 19 பேரை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன்பேரில் மகேஸ்வரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசார் புதுக்கோட்டை சிறையில் உள்ள மகேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.