திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிகர நிகழ்ச்சியாக 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

மதுரை,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக் களில் பங்குனி பெருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஆண் டுதோறும் 15 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா நாளை(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 6-ந் தேதி வரை 15 நாட்கள் விழா கோலாகலமாக நடக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையிலும், இரவிலுமாக பல்வேறு வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வருகிற 28-ந் தேதி கைப்பாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கோவிலில் உள்ள வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளியிலான யானை வாகனத்தில் எழுந்தருளும் முருகப்பெருமான், தெய்வானையை பக்தர்களும், கோவில் சீர் பாதங்களும் கைப்பாரமாக சுமந்து செல்வது தனிச்சிறப்பாகும். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படும்.

1-ந்தேதி பங்குனி உத்திரம் அன்று ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 2-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக 3-ந்தேதி முருகப்பெருமானுக்கு தங்க கீரிடம் சூட்டி நவரத்தினங்களாலான செங்கோல் வழங்கி பட்டாபி ஷேகம் நடக்கிறது.

திருவிழாவின் முத்தாய்ப்பாக 4-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை யின் திருக்கல்யாணம் நடக்கிறது. அப்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சிகர நிகழ்ச்சியாக 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 6-ந் தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com