‘சவுகார் ஜானகியின் மறைவு கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு’ - வானதி சீனிவாசன்

7 தலைமுறைகளுக்கும் மேலாக சினிமா, நாடகத்துறையில் கோலோச்சியவர் சவுகார் ஜானகி என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
‘சவுகார் ஜானகியின் மறைவு கலைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு’ - வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மறைவுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தென்னிந்திய சினிமாவின் பழம் பெரும் திரைக்கலைஞரான சவுகார் ஜானகி அம்மையார் வயது மூப்பால் காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.

7 தலைமுறைகளுக்கும் மேலாக சினிமா, நாடகத்துறையில் கோலோச்சி, தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அம்மையாரின் மறைவு கலைத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com