

சென்னை,
கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களை மீண்டும் இயக்குவதற்கு அரசு நிதிஉதவி செய்யவேண்டும். விளைந்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்.
வேலையில்லாதோர் வேதனை தணிக்க, வேலை இழந்துள்ளோருக்கு மறுவாழ்வளிக்க, குறைந்தபட்சம் 6 மாத காலங்களுக்காவது குடும்பத்துக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 நேரடி பணஉதவி வழங்கவேண்டும். கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டோருக்கு, அரசின் செலவில் மருத்துவ வசதி அளிக்கவேண்டும். பரிசோதனை கூடங்களை அதிகப்படுத்தி, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்.
இடஒதுக்கீடு வழங்கும் முறையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் திட்டத்தை தடுக்கவேண்டும் என்பது போன்ற மக்கள்வாழ்வில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் உண்மை பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டாளிகள் செய்துவரும் அரசியல் சூழ்ச்சிகளை விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.