

சேரன்மாதேவி:
வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (45) என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு சுப்பிரமணியன் நேற்று முன்தினம் மணிகண்டன் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருந்த காரின் கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த மணிகண்டனை பார்த்து சுப்பிரமணியன் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை நேற்று கைது செய்தனர்.