கள் விற்றவர் கைது

நெல்லை அருகே கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கள் விற்றவர் கைது
Published on

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபினா மரியம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வல்லவன்கோட்டை அருகே பனங்காட்டு பகுதியில் கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடினார். அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் துலுக்கர்பட்டி காலனி தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் மூர்த்தி (வயது 29) என்பதும், பனைமரத்தில் இருந்து கள் இறக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com