வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Published on

வாலாஜா:

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கது செய்யப்பட்டார்.

வாலாஜாபேட்டை காகிதக்காரத்தெருவை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் பழனிச்சாமி (வயது 31). இந்த தெரு வழியாக வன்னிவேடு ரபீக் நகரை சேர்ந்த முகமது அலி (58) என்பவர் வந்து கொண்டிருந்தார். சாலையில் வழி விடுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த முகமது அலி தான் வைத்திருந்த பேனா கத்தியால் பழனிச்சாமியின் கழுத்தில் கீறி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது அலியை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com