செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடும் காட்சி வைரல் ஆகி வருகிறது.
செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்
Published on

சென்னை

இயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராமதாஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சிவக்குமார் சென்று இருந்தார். அங்கு இருந்த நபர் ஒருவர் சிவக்குமாருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றார். முகத்திற்கு நேராக செல்போனை கொண்டு வந்து அந்த நபர் நீட்டியபோது, சிவக்குமார் அதனை தட்டிவிடுவது போன்ற காட்சிகள் வைரல் ஆகி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையில் கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த நபருக்கு நடிகர் சிவக்குமார் புதிய செல்போன் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com