கஞ்சா வைத்திருந்தவர் கைது

நெல்லை அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா வைத்திருந்தவர் கைது
Published on

நெல்லை அருகே சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று ராமசந்திராபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேட்டு குப்பக்குறிச்சியை சேர்ந்த ஊமைத்துரை (வயது 21) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com