தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி த.வெ.க. எம்.எல்.ஏ. இளங்கோவன் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

இளங்கோவனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
த.வெ.க. எம்.எல்.ஏ. இளங்கோவன்
Published on: 

சென்னை,

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மானாமதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மானாமதுரை எம்.எல்.ஏ.

கடந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட இளங்கோவன், 69 ஆயிரத்து 971 வாக்குகள் பெற்று, 1,208 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்டு, 68 ஆயிரத்து 763 வாக்குகள் பெற்று தோல்வியடைந்த திமுக வேட்பாளர் தமிழரசி, இளங்கோவனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மனு தள்ளுபடி

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, தவெக எம்.எல்.ஏ. இளங்கோவன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்து, தவெக எம்.எல்.ஏ. இளங்கோவனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், திமுக வேட்பாளர் தமிழரசி தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் பதிலளிக்கும்படி, தவெக எம்.எல்.ஏ. இளங்கோவனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

X