அரசு பள்ளியில் உலக அறிஞர்கள் உள்பட 70 பேர் படங்கள் திறப்பு

அரசு பள்ளியில் உலக அறிஞர்கள் உள்பட 70 பேர் படங்கள் திறக்கப்பட்டன.
அரசு பள்ளியில் உலக அறிஞர்கள் உள்பட 70 பேர் படங்கள் திறப்பு
Published on

கரூர் கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் தமிழ் அறிஞர்கள், தேசிய தலைவர்கள், அறிவியலாளர்கள், குடியரசு தலைவர் , பிரதமர், முதல்வர், உலக அறிஞர்கள் உள்பட 70 பேர் படங்களின் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்த படங்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மணிவண்ணன் திறந்து வைத்து தலைவர்களின் தியாகத்தின் பெருமைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். விழாவில் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட துணை அலுவலர் சண்முகவடிவு, தாந்தோணி வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, கெளரி, தாந்தோணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் வரவேற்று, 70பேர் படங்களை நன்கொடையாக வழங்கியவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com