‘பிளஸ்-2 தேர்வு அட்டவணை முதல்-அமைச்சருடன் கலந்து பேசி தான் அறிவிக்கப்பட்டுள்ளது’ - அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ்-2 தேர்வு அட்டவணை முதல்-அமைச்சருடன் கலந்து பேசி தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் எந்த குழப்பமும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
‘பிளஸ்-2 தேர்வு அட்டவணை முதல்-அமைச்சருடன் கலந்து பேசி தான் அறிவிக்கப்பட்டுள்ளது’ - அமைச்சர் செங்கோட்டையன்
Published on

ஈரோடு,

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று திடீரென 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் அட்டவணையின்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. அவ்வாறு தொடங்குகிற இந்த தேர்வு அதே மாதம் 21-ந் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. மெத்தம் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு அட்டவணை குறித்து ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிளஸ்-2 தேர்வு அட்டவணை முதல்-அமைச்சருடன் கலந்து பேசி தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை.

கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சி மற்றும் 10 தனியார் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுத் தரப்படுகிறது. ஆகையால், தமிழகத்தில் கல்வித்தரம் குறையவில்லை. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com