விஷம் குடித்த விவசாயி சாவு

இடைகாலில் மது குடிக்க மகன் பணம் கொடுக்க மறுத்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்த விவசாயி சாவு
Published on

முக்கூடல்:

இடைகால் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 78), விவசாயி. சம்பவத்தன்று இவர் மதுகுடிப்பதற்காக மகனிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்காததால் விரக்தி அடைந்த சுப்பையா விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com