விஷம் குடித்த பெண் சாவு

விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
விஷம் குடித்த பெண் சாவு
Published on

விஷம் குடித்த பெண் சாவுஅன்னவாசல் அருகே உள்ள காந்துப்பட்டியை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி மீனாட்சி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com