ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களுடன் ரெயிலில் தவறவிட்ட பையை பயணியிடம் மீண்டும் ஒப்படைத்த போலீசார்

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களுடன் ரெயிலில் தவறவிட்ட பையை பயணியிடம் மீண்டும் ரெயிவே போலீசார் ஒப்படைத்தனர்.
ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களுடன் ரெயிலில் தவறவிட்ட பையை பயணியிடம் மீண்டும் ஒப்படைத்த போலீசார்
Published on

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையில் வந்து நின்றது. அதில் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிபு ஜார்ஜ் (வயது 45) என்பவர் தான் வைத்திருந்த தோள் பையை, ரெயிலிலேயே தவறவிட்டு சென்றுவிட்டார்.

இதற்கிடையே அந்த ரெயிலை சோதனையிட்ட போலீசார், கருப்பு நிற தோள்பை ஒன்று படுக்கை வசதி பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை கண்டனர். அந்த பையை கைப்பற்றி நடத்திய விசாரணையில் அந்த பை சிபு ஜார்ஜ் உடையது என்பது தெரியவந்தது. அந்த பையில் கை கடிகாரம், ஹெட்செட், வங்கி புத்தகம், 32 ஜி.பி.மெமரி கார்டு, செல்போன் உள்பட ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த தோள்பையை அதில் இருந்த பொருட்களுடன் பத்திரமாக, பைக்கு உரியவரான சிபு ஜார்ஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com