உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு ரூ.29 லட்சம் நிதி வழங்கிய போலீசார்

உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு ரூ.29 லட்சம் நிதியை போலீசார் வழங்கினர்.
உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு ரூ.29 லட்சம் நிதி வழங்கிய போலீசார்
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் கலைச்செல்வன். இவர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு சுபாசினி என்ற மனைவியும், யாழினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஏட்டு கலைச்செல்வனுடன் கடந்த 2003-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அனைத்து மாவட்ட போலீசாரும் இணைந்து திரட்டிய ரூ.29 லட்சத்து 3 ஆயிரத்து 500 நிதியை, அவரது குடும்பத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிதி, ஏட்டுகள் செந்தில்குமார், பால்பாண்டியன், ஸ்டாலின் சகாயராஜ், பழனிச்சாமி, வசந்த் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட உதவும் கரங்கள் பொறுப்பாளர்கள் மூலமாக கலைச்செல்வன் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com