திண்டிவனத்தில் கிணற்றில் தொழிலாளி பிணம் போலீசார் விசாரணை

திண்டிவனத்தில் கிணற்றில் தொழிலாளி பிணமாக கிடந்தது தொடாபாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா.
திண்டிவனத்தில் கிணற்றில் தொழிலாளி பிணம் போலீசார் விசாரணை
Published on

திண்டிவனம், 

திண்டிவனம் அய்யந்தோப்பு சாலையோரம் உள்ள விவசாய கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோஷணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் திண்டிவனம் பாரதிதாசன் நகர் ஆலன் தெருவை சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் (வயது 47) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் இறந்ததற்கான காரணம் என்னவென்று, உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து ராஜேந்திரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com