வாலிபர் தவறவிட்ட பணப்பையை திரும்ப ஒப்படைத்த போலீசார்

கூடலூர் பஸ் நிலையத்தில் வாலிபர் தவறவிட்ட பணப்பையை திரும்ப ஒப்படைத்த போலீசாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
வாலிபர் தவறவிட்ட பணப்பையை திரும்ப ஒப்படைத்த போலீசார்
Published on

கூடலூர்

பந்தலூர் தாலுகா எருமாடு பகுதியில் வசிப்பவர் சுஜித். வாலிபரான இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று கூடலூர் வந்தார். அப்போது கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் பணப்பையை (மணி பர்ஸ்) தவற விட்டார். இந்தநிலையில் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த கூடலூரை சேர்ந்த முகமது அசத்துல்லா என்பவர் கீழே கிடந்த பணப்பையை எடுத்து போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து பணப்பையை திறந்து பார்த்தபோது, அதில் பல ஆயிரம் ரூபாய் மற்றும் பல ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் இருந்தது. மேலும் சுஜித்தின் தொலைபேசி எண் இருப்பதை போலீசார் கண்டனர். பின்னர் அவரை தொடர்பு கொண்டு போலீசார் வரவழைத்தனர். இதையடுத்து சுஜித் உடனடியாக பழைய பஸ் நிலையத்துக்கு வந்து போக்குவரத்து போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார். பின்னர் அவரிடம் பணப்பையை போலீசார் திரும்ப ஒப்படைத்தனர். மேலும் தவறவிட்ட பணப்பையை எடுத்து கொடுத்தவருக்கு நன்றி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com