நன்னடத்தை உறுதிமொழி அளித்த 462 ரவுடிகளிடம் போலீசார் திடீர் விசாரணை

சென்னையில் நன்னடத்தை உறுதிமொழி அளித்த 462 ரவுடிகளிடம் போலீசார் திடீர் விசாரணை நடைபெற்றது.
நன்னடத்தை உறுதிமொழி அளித்த 462 ரவுடிகளிடம் போலீசார் திடீர் விசாரணை
Published on

சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் போலீசார் திடீர் சிறப்பு சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நேற்று முன்தினம் சிறப்பு சோதனை நடைபெற்றது.

இதில் திருந்தி வாழப்போவதாக உறுதிமொழி அளித்துள்ள 462 ரவுடிகள் தற்போது குற்றச்செயல்களில் எதுவும் ஈடுபடாமல் இருக்கிறார்களா? என்பதும் கண்காணிக்கப்பட்டது. அதன்படி நடத்தப்பட்ட கண்காணிப்பில் 2 ரவுடிகள் மட்டும் சட்டம்-ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மற்ற ரவுடிகளுக்கு போலீசார் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு சோதனையில் 26 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை போலீசார் பெற்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com