வேலியே பயிரை மேய்ந்த அவலம்; தண்ணீர் பந்தலில் டம்ளரை திருடி சென்ற போலீசார்

புதுக்கோட்டையில் வேலியே பயிரை மேய்ந்தது போன்று தண்ணீர் பந்தலில் வைத்திருந்த டம்ளரை போலீசார் திருடி சென்றனர்.
வேலியே பயிரை மேய்ந்த அவலம்; தண்ணீர் பந்தலில் டம்ளரை திருடி சென்ற போலீசார்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கேட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் கோடை காலத்தினை முன்னிட்டு பொதுமக்களின் தேவைக்காக தண்ணீர் பந்தல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அதில் இருந்த டம்ளர் காணாமல் போனது. தொடர்ந்து நடந்த இந்த சம்பவத்தினை அடுத்து இதனை கண்டுபிடிக்க அங்கு சி.சி.டி.வி கேமிரா வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டம்ளரை இரவு ரேந்து பணியில் இருந்த பேலீசார் எடுத்து சென்றனர். இந்த காட்சி, அங்கு பெருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவானது. இந்த காட்சியை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்தது போன்று நடந்த இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com