போலீஸ்காரர் மயங்கி விழுந்து சாவு

அரக்கோணத்தில் போலீஸ்காரர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
போலீஸ்காரர் மயங்கி விழுந்து சாவு
Published on

அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 39). இவர் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். திருமணமாகி யமுனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சதீஷ் குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சதீஷ் குமார் திடீரென மயங்கி விழுந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com