பொருநை அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு: பார்வையாளர் கட்டணம் வெளியீடு

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
நெல்லை,
பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் மக்கள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதனையொட்டி கல்லூரி மாணவர்களும், உள்ளூர் மக்கள் என்று பலர் பொருநை அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
* காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொருநை அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிடலாம்.
* பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட சிறியவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 கட்டணம் பெரியவர்களுக்கு கட்டணமான ரூ. 20 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* வெளிநாட்டினருக்கு ரூ.50 நுழைவுச்சீட்டு கட்டணமாக வசூலிக்கப்படும்.
* செவ்வாய் கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் பொருநை அருங்காட்சியத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* அருங்காட்சியகத்தின் 5D, 7D தியேட்டருக்கு ரூ.25 தனி கட்டணம்
* பொருநை அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட வசதியாக நெல்லை ரெயில் நிலையம், நெல்லை பஸ்டாண்ட் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.






