பூக்கள் விலை குறைந்தது

பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை குறைந்தது.
பூக்கள் விலை குறைந்தது
Published on

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ.500-க்கும் ஏலம் போனது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ50-க்கும், அரளி கிலோ ரூ.90-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும் ஏலம் போனது. முகூர்த்தங்கள் அதிக அளவில் இல்லாததால் பூக்கள் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com