முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
Published on

சென்னை,

முகூர்த்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

மல்லி பூ நேற்று ரூ. 800க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கனகாம்பரம் நேற்று ரூ.700க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,000க்கு விற்கப்படுகிறது.

அதேபோல பன்னீர் ரோஸ் ரூ.80, அரளிப்பூ ரூ.70, சாமந்திப்பூ ரூ.80, சாதி மல்லி ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com