தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதைபோல வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com