தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து ஒரு கிராம் ரூ.4,710-க்கும், சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.37,680-க்கும், விற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.58.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 58,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com