கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

பூதப்பாண்டி அருகே கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.
கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.

பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பப்பு, தொழிலாளி. இவர் வீட்டின் பின்புறம் கோழிகளை வளர்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மதியம் கோழிக்கூட்டுக்குள் இருந்த கோழிகளை விழுங்கிவிட்டு 10 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த வலையில் சிக்கியிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பப்பு உடனே பூதப்பாண்டி வனச்சரக அலுவலகதுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனசரகர் ரவீந்திரன் உத்தரவின்பேரில் வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை பிடித்தார். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com