சூளகிரி அருகேதேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாம்பு பிடிபட்டது

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாம்பு பிடிபட்டது.
சூளகிரி அருகேதேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாம்பு பிடிபட்டது
Published on

சூளகிரி:

சூளகிரி அருகே சின்னாரில் உள்ள ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 15 அடி நீளத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை அருகில் உள்ள மேலுமலை காட்டில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com