தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்துள்ளது - நடிகை ஷகிலா பேட்டி

தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்துள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்துள்ளது - நடிகை ஷகிலா பேட்டி
Published on

நடிகை ஷகிலா

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் "தொடுவிரல்" என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக நேற்று சென்னிமலை வந்திருந்த நடிகை ஷகிலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது தமிழ் சினிமாவில் கேமராவில் நவீன தொழில் நுட்பங்களும், அதனை பயன்படுத்தும் தொழில்நுட்ப கலைஞர்களும் அதிகரித்துள்ளார்கள். இதனால் சினிமாவின் தரமும் உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர்களுக்கு நடிகர், நடிகைகள் கூடுதல் செலவு வைக்காமல் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அதிக படங்களை தயாரிக்க முடியும்.

ரசிகர்களுடன் செல்பி

கேரவனுக்காக செய்யும் செலவில் பல பேருக்கு உணவு கொடுக்கலாம். மீ.டூ போன்ற அனுபவங்கள் எனக்கு எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

இவ்வாறு நடிகை ஷகிலா கூறினார்.

அப்போது படத்தின் டைரக்டர் ராகவ ஹரிகேசவா மற்றும் கதாநாயகனாக நடிக்கும் நக்கீரன், நடிகை ஷாஸா ஆகியோர் உடன் இருந்தனர். நடிகை ஷகிலா சென்னிமலை வந்த தகவல் கிடைத்ததும் ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக திரண்டுவிட்டார்கள். மேலும் அவர்கள் ஷகிலாவுடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com