மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் பரவலாக மழை
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பகலில் லேசான வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் மற்றும் இரவு நேரங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை காணப்பட்டது. குறிப்பாக போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :- போச்சம்பள்ளி-40, பாரூர்-26, சூளகிரி-24, நெடுங்கல்-16.20, தேன்கனிக்கோட்டை- 13.20, தளி-10, கிருஷ்ணகிரி- 8.80, ஓசூர்-2, ஊத்தங்கரை- 1.40 என மாவட்டம் முழுவதும் 141. 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசாக மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com