முகக்கவசம் அணியாததே கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் மறந்து விடக் கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாததே கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Published on

சென்னை,

இது குறித்து சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொதுமக்கள் முகக்கவசம் அணியாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம். முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் மறந்து விடக் கூடாது. அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரட்டை உருமாறிய கொரோனா இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா காரணம் இல்லை. அறிகுறி இருந்தால் சுய மருத்துவம்செய்யாமல் மருத்துவமனையை அணுக வேண்டும்.

தமிழகத்தில் பரிசோதனை அதிகரிக்க உள்ளதால், தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டக்கூடும். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படிப்படியாக கொரோனாவை குறைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இதுவரை 25 லட்சம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஏப்., முதல் வாரத்தில் 10 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. தமிழகத்தில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேரும் குணமடைந்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com