மதுரை விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கொடுத்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி. தினகரன்

அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடம் கோரி போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்த பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை வழங்கக் கோரி சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று ஏற்பாடுகளைக் கூட செய்து தர மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவலர்களை குவித்து அச்சுறுத்துவதோடு, அவர்களின் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதியை நிறுத்துவதும், மின்சார இணைப்பை துண்டிப்பதும் தி.மு.க. அரசின் அடக்குமுறையையும், ஆணவப்போக்கையும் வெளிப்படுத்துகிறது.

எனவே, தங்களின் வாழ்வாதார தேவைகளுக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு கிராம மக்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com