‘ஆட்சி மாறிவிட்டது.. இனி இப்படி செய்யாதீர்கள்’ - ஆவின் பால் பாக்கெட் குறைந்ததால் வியாபாரி வாக்குவாதம் - வைரல் வீடியோ

பால் வண்டி ஓட்டுநரிடம் வியாபாரி வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
‘ஆட்சி மாறிவிட்டது.. இனி இப்படி செய்யாதீர்கள்’ - ஆவின் பால் பாக்கெட் குறைந்ததால் வியாபாரி வாக்குவாதம் - வைரல் வீடியோ
Published on

மதுரை,

மதுரையில் ஆவின் பால் முகவர்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட் எண்ணிக்கை, ரசீதில் குறிப்பிட்டதை விட குறைவாக உள்ளது எனக்கூறி, பால் வண்டி ஓட்டுநரிடம் வியாபாரி ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட வியாபாரி தனக்கு வழங்கப்பட்ட கிரேடில் ஒரு பாக்கெட் பால் குறைவாக இருப்பதாக ஓட்டுநரிடம் கூறுகிறார். மேலும் அவர், ‘ஆட்சி மாறிவிட்டது, இனி இப்படியெல்லாம் செய்யாதீர்கள்’ என்று கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதற்கு அந்த ஓட்டுநர் சரியாக பதில் கூறாமல், ‘உரிமையாளரிடம் பேசிக் கொள்ளுங்கள், வீடியோ எடுக்காதீர்கள்’ என்று கூறுகிறார்.

இருப்பினும் அந்த வியாபாரி விடாமல் தனக்கு ஒரு பாக்கெட் பால் குறைவாக இருப்பதாகவும், உடனடியாக தனக்கு சரியான கணக்குப்படி பால் பாக்கெட்டை தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com