உழவுத் தொழிலுக்கும் மாட்டுக்குமான உறவு என்பது இன்றியமையாதது... - நயினார் நாகேந்திரன்


உழவுத் தொழிலுக்கும் மாட்டுக்குமான உறவு என்பது இன்றியமையாதது... - நயினார் நாகேந்திரன்
x

மாட்டு பொங்கலை முன்னிட்டு நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதவாது;-

உழவனின் உற்ற நண்பன், உழவுத் தொழிலுக்கும் மாட்டுக்குமான உறவு என்பது இன்றியமையாதது.

விவசாய வேலைகளுக்கு மட்டுமா மாடுகள்..? நாட்டு மாடுகளின்… கழிவுகள் இயற்கை விவசாயத்திற்கு வித்திடுகிறது. தன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக ஒவ்வொரு விவசாயியும் தன் வீட்டில் வளர்க்கும் மாடு, ஆடுகளின் மீது அன்பு செலுத்துகின்றனர். அவ்வாறு உழவருக்கும் தான் வளர்க்கும் காளைகளுக்கும் இடையே நடக்கும் ஒரு அன்பு பரிமாற்றமே ஏறு தழுவுதல்.

காங்கேயம், பருகூர், உம்பளச்சேரி, புலிக்குளம், ஆலம்பாடி, மற்றும் தேனி மலை மாடு என்று எண்ணிலடங்கா நம் நாட்டு மாட்டு இனங்களின் அவசியத்தை வரும் தலைமுறையினருக்கும் உணர்த்தி, போற்றி காப்போம் என்று இந்நன்னாளில் உறுதியேற்று, நாம் அனைவரும் மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story