மதவாத பாஜகவால் தமிழ்நாட்டுக்குள் தலையெடுக்கவே முடியாது - மு.க.ஸ்டாலின்

எத்தனை மாறுவேடம் போட்டு வந்தாலும், மதவாத பாஜகவால் தமிழ்நாட்டுக்குள் தலையெடுக்கவே முடியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதவாத பாஜகவால் தமிழ்நாட்டுக்குள் தலையெடுக்கவே முடியாது - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே… தவறான பொருளாதாரக் கொள்கைகளால், மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தடை போட்ட மத்திய என்டிஏ கூட்டணியைத் திருப்பூர் முற்றிலும் தடை செய்யும்!

பெண்கள் இட ஒதுக்கீட்டுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் பழனிசாமி அவர்களே! மகளிர் இட ஒதுக்கீட்டை இப்போதே நிறைவேற்ற வலியுறுத்தி இன்று நாடாளுமன்றத்தில் திமுக கொண்டு வந்த மசோதாவை ஏன் உங்கள் கூட்டணி ஆதரிக்க மறுக்கிறது?

எத்தனை மாறுவேடம் போட்டு வந்தாலும் சரி... மதவாத பாஜகவால் தமிழ்நாட்டுக்குள் தலையெடுக்கவே முடியாது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com