சட்டசபையில் விசிக கொண்டு வந்த தீர்மானம் திமுக எதிர்ப்பால் தோல்வி

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்ட மசோதா நேற்று ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டசபையில் விசிக கொண்டு வந்த தீர்மானம் திமுக எதிர்ப்பால் தோல்வி
Published on

சென்னை,

சட்டசபையில் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்ட மசோதா, ஆய்வுக்காக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் பதவி வழி தலைவராக மாவட்ட கலெக்டரும், அரசால் நியமிக்கப்படும் நபர்களில் 3 பேர் அரசு அலுவலர்களாகவும், ஒருவர் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பதற்கு அந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.

மசோதா ஆய்வுக்கு எடுக்கப்பட்டபோது அதில் விடுதலைச் சிறுத்தை கட்சி எம்.எல்.ஏ. பாலாஜி திருத்தம் கோரினார். அதாவது அவர், ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என்பதை 2 எம்.எல்.ஏ.க்கள் என்று மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிவதாக குறிப்பிட்டார். அதை அதே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. முகமது ஷாநவாஸ் வழிமொழிந்தார்.

அதைத்தொடர்ந்து அந்த தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதித்தார். அந்த தீர்மானத்தை எந்தக் கட்சியினருமே ஆதரிக்கவில்லை. ஆனால் அதை எதிர்ப்போர் யார் யார்? என்று சபாநாயகர் கேட்டபோது, திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே எதிர்த்து வாக்களித்தனர். எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com