ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் இணைய வழியில் 20-ந்தேதி நடக்கிறது

சென்னை ராயப்பேட்டையில் ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் இணைய வழியில் 20-ந்தேதி நடக்கிறது.
ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் இணைய வழியில் 20-ந்தேதி நடக்கிறது
Published on

தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை எடுக்க விரும்புபவர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் (பென்சன் அதாலத்) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவன மண்டல அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு ஆன்லைன் (இணையவழி) முறையில் நடத்துகிறது.

சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டல அலுவலகத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதியம் தொடர்பான குறைகளை pension.rochn1@epfindia.gov.in என்ற இணையதள முகவரியில் 'பென்சன் அதாலத்' என்ற தலைப்பில் கோடிட்டு, அதோடு சேர்த்து தங்களுடைய பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், தொலைபேசி எண், ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை உள்ளிட்ட விவரங்களையும் அனுப்பி பதிவு செய்யவேண்டும்.

இதையடுத்து இணையவழி மூலமாக நடத்தப்படும் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்பதற்கான 'லிங்க்' அதாவது இணையவழி இணைப்பு, ஓய்வூதியதாரர்கள் கொடுக்கும் இணையதள முகவரி அல்லது தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.

மேற்கண்ட தகவல் சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com