மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன.
மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன
Published on

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் பகுதியில் முதல் குறுவை பட்ட நெல் சாகுபடிக்கு கடந்த மார்ச் மாதம் நடவு செய்தனர். இதையடுத்து நெற்கதிர்கள் முற்றிய நிலையில் விவசாயிகள் அறுவடை பணிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். கொப்பம்பட்டி, வைரிசெட்டிப்பாளையம், புளியஞ்சோலை, பி.மேட்டூர், ஆலத்துடையான்பட்டி, பச்சபெருமாள்பட்டி, ரெட்டியாப்பட்டி, எரகுடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முதல் குறுவை நெல் சாகுபடியில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுகிய கால நெல் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

நெற்பயிர்கள் விளைச்சலையடுத்து வருகிற ஜூன் மாதத்தில் அறுவடைப் பணிகள் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் உப்பிலியபுரம் பகுதியில் நேற்று முன்தினமும், நேற்றும் இடியுடன் மழை பெய்தது.

இதையடுத்து மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. மழை தொடரும் பட்சத்தில், மகசூல் பாதிப்படைவது மட்டுமன்றி அறுவடையில் காலதாமதம், விரயச்செலவுகள் ஏற்படும் என்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் சம்பா பருவ நெல் சாகுபடிக்கு காப்பீடு செய்வது போல், குறுவை சாகுபடிக்கும் காப்பீடு திட்டங்களை அமல்படுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com