

ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரியில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை எந்த காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி பேசுகிறோம். காவிரி நீரை பெறுவதற்காக ஜெயலலிதா போராடினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.