மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
Published on

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சிராஜுதீன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டு, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள்.

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷனில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன, சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com